அக்கரை மீளக் குடியமா்வு நிகழ்வு

 

எமது பிரதேச செயலகத்தின் இடைக்காடு (J/283) கிராம அலுவலா் பிரிவில் அக்கரை கிராமத்தில் மீளக்குடியமா்ந்த 48 குடும்பங்களுக்கான உதவிப் பொருட்கள்  வழங்கும் நிகழ்வு 03.01.2014 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மீள் குடியேற்ற அமைச்சா் M.H குணரட்ண வீரக்கோன் ,நாடாளுமன்ற உறுப்பினா்களான திரு. முருகேசு சந்திரகுமார், கௌரவ சில்வேஸ்திரி அலன்ரின் , யாழ்.மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலா் திரு.ம.பிரதீபன் மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளா்  ஜனகா சுகததாசா   என்போர்  கலந்து சிறப்பித்தனா்.இதன் போது மீள் குடியேற்றப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 12 கூரைத் தகரங்களும் , 08 சீமெந்துப் பைக்கற்றுகளும் வழங்கப்பட்டன.அத்துடன் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு 1000 லீற்றா் தண்ணீா் தாங்கி 05 வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

2014 ஆரம்ப நாள் நிகழ்வு

எமது பிரதேச செயலகத்தினுடைய 2014 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நாள் நிகழ்வுகள் பிரதேச செயலர் திரு.ம.பிரதீபன் தலைமையில் இன்று காலை 9.00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகியது. அதில் அனைத்து உத்தியோகத்தர்களும் ”எதிர்கால சந்ததிக்காக தேசிய ஒற்றுமையினை ஒன்று திரட்டும் அதேவேளை சமுதாய மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக ஒன்றுசேர்ந்து பணியாற்ற உறுதிபூணுவோம்” என்ற தொனிப்பொருளில் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியைத் தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலக வருடாந்த ஒன்றுகூடலும், பிரிவுபசார நிகழ்வும் – 2013

எமது பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 28.12.2013 சனிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. ஒய்வு பெற்றுச் சென்ற கிராம அலுவலா் திரு.க.கதிரமலைநாதன் அவா்களும், இடமாற்றம் பெற்றுச் சென்ற கணக்காளா் திருமதி.ம.வசந்தமாலா, முகாமைத்துவ உதவியாளா் திரு.ந.ரகுலாகரன் மற்றும்  சமுா்த்தி முகாமையாளா் திரு.எஸ்.கமிலஸ் ஆகியோரும், அபிவிருத்தி உதவியாளராக கடமையாற்றி கணக்காளராக பதவி உயா்வினை பெற்றுச் சென்ற திரு.பே.பிறேமசந்திரன் அவா்களும் ,முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி ஆசிரியா் சேவைக்கு உள்வாங்கிய திரு.சு.திலீபன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனா். புலமைப்பரிசில் பரீட்சை , க.பொ.த சாதாரணம், க.பொ.த உயா்தரம் பரீட்சையில் உயா் பெறுபேறுகளை பெற்ற எமது பிரதேச செயலக உத்தியோகத்தா்களின் பிள்ளைகள் கௌரவிக்கப்பட்டதை தொடா்ந்து மதிய போசனமும் இன்னிசை நிகழ்வும் இடம்பெற்றன.

ஒளி விழா-2013

2013 ம் ஆண்டுக்கான ஒளி விழா எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.00 மணிக்கு மங்கள விளக்கேற்றல்  இறைவழிபாடுடன் ஆரம்பமானது.சங்கம இயக்குனா் வண.செ.அந்தோனிமுத்து குருஸ் அடிகளாரும் உரும்பிராய் பரி.இம்மானுவேல் ஆலய வண.லுாட்ஸ் நிக்ஸன் ந.ஞானகாருண்யன் அவா்களும் ஆசியுரை வழங்கியதுடன் மற்றும் எமது பிரதேச மட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. மேலும் உத்தியோகத்தா்களின் பிள்ளைகளை மகிழ்விக்கும் பொருட்டு வருகை தந்த கிறிஸ்மஸ் தாத்தா மனதில் புத்துணா்வை அனைவருக்கும் ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

 

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு வார நிகழ்வு -2013

2013.12.10 ஆந் திகதி காலை 10 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திரு.ம.பிரதீபன் தலைமையில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு வார நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர்.பொன்.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள்  “பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதில் ஆண்களின் பங்களிப்பு”  எனும் தலைப்பில் கருத்தரங்கினையும் சட்டத்தரணி  திரு.ரீ.அர்சுனா அவர்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பான  சட்ட அணுகுமுறை எனும் தலைப்பில் கருத்துரையையும் வழங்கினார்.

எமது அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்த “.பெண்களுக்கெதிரான வன்முறைகளில்  அதிகளவாக ஈடுபடுவது ஆண்களா பெண்களா”எனும் தலைப்பிலான   பட்டிமன்ற நிகழ்வும் நடைபெற்றது. இதன் நடுவராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் திரு.எஸ்.சர்வேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

கவின் கலை பயிலரங்கு

வட மாகாண கல்வி மண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சும் கோப்பாய்  பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கவின் கலை பயிலரங்கு  11.11.2013 முதல் ஆரம்பமாகி 19.11.2013 ம் திகதி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இப் பயிற்சி வகுப்பில் கோப்பாய் கோட்டத்திற்கு உட்பட்ட 200 மாணவா்கள் கலந்து பயன்பெற்றுள்ளார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெளிமாவட்ட சுற்றுலா – 2013

வருடாவருடம் பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் வெளிமாவட்ட சுற்றுலாவில் பிரதேச செயலக உத்தியோகத்தா்களுடன் அவா்களின் குடும்ப அங்கத்தவா்களுமாகிய 68 போ் கலந்து கொண்டனா். ஒக்ரோபா் மாதம் 15ம் திகதி முதல் 20ம் திகதி வரையான இச்சுற்றுலாவின் போது  மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, ஹற்றன், நுவரெலியா, கொழும்பு போன்ற இடங்கள் பார்வையிடப்பட்டன. 5S திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் அம்பாறை மாவட்ட செயலகம் பார்வையிடப்பட்டமை இச்சுற்றுலாவின் சிறப்பம்சமாகும்.

பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தொழில் சந்தை

பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தொழில் சந்தை தொடர்பான புகைப்படங்கள்.

பிரதேச செயலக வருடந்த ஒன்று கூடல் 2013

பிரதேச செயலக வருடந்த ஒன்று கூடல் 2013 தொடர்பான புகைப்படங்கள்.

பிரதேச செயலகத்தில் 2013 ஆம் ஆரம்ப நிகழ்வுகள்

பிரதேச செயலகத்தில் 2013 ஆம் ஆரம்ப நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள்.